/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினம் மின் வினியோகத்திற்கு புதிய மின்தடம் அமைக்க வலியுறுத்தல்
/
புதுப்பட்டினம் மின் வினியோகத்திற்கு புதிய மின்தடம் அமைக்க வலியுறுத்தல்
புதுப்பட்டினம் மின் வினியோகத்திற்கு புதிய மின்தடம் அமைக்க வலியுறுத்தல்
புதுப்பட்டினம் மின் வினியோகத்திற்கு புதிய மின்தடம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2024 01:53 AM

புதுப்பட்டினம்:அணுசக்தி துறையின்கீழ் உள்ள கல்பாக்கம் நகரியத்தை ஒட்டி, புதுப்பட்டினம் ஊராட்சி பகுதி உள்ளது. கல்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியினருக்கு, புதுப்பட்டினம் முக்கிய வர்த்தக இடமாக அமைந்துள்ளது.
வசிப்பிட பகுதிகள் விரிவடைந்து வளர்ச்சியடைகிறது. இங்கு, மின்சார நுகர்வு அதிகரித்துவரும் நிலையில், அதற்கேற்ப மின் திட்டங்களை மின் வாரியம் செயல்படுத்தவில்லை என, குற்றச்சாட்டு உள்ளது.
கல்பாக்கத்தின் முக்கிய வர்த்தக இடமாக இருந்தும், மின் பற்றாக்குறையாக உள்ளது. ஒரு நாளில் பலமுறை மின்தடை ஏற்படுகிறது. மின்னழுத்தம் குறைவாகவும் உள்ளது.
மாலை நேரம் கடந்து, அடிக்கடி ஏற்படும் மின் தடையால், வியாபாரம் செய்ய இயலாமல், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மின்னழுத்த குறைபாட்டால், வீடுகளில் மின்விசிறி, பிரிஜ் உள்ளிட்ட மின் சாதனங்கள் இயங்குவதில்லை. பழுதும் ஏற்படுகிறது.
இந்நிலையில், தடையற்ற மின் வினியோகம் கருதி, வெங்கப்பாக்கம் துணை மின் நிலையத்திலிருந்து, 11 கி.வாட் மின் திறனில் புதிய மின் தடம் ஏற்படுத்த பணிகளை துவக்கிய மின் வாரியம், அரைகுறை பணியோடு கிடப்பில் போட்டுள்ளது.
அதற்காக அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் முறையாக அமைக்கப்படாததால், சரிந்து விழும் நிலையில் உள்ளன. இப்பகுதி முக்கியத்துவம் கருதி, புதிய மின் தடத்தை விரைவில் செயல்படுத்தி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்ப்குதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.