/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
/
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 30, 2024 04:51 AM

திருப்போரூர்: செம்பாக்கம் - -மேடவாக்கம் நெடுஞ்சாலை இடையே, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய காயார் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதி பள்ளத்தெரு அருகே, சாலையோரம் குடியிருப்புகள் உள்ளன.
இங்கு முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் ஏற்பட்டு, அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.