/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓட்டுச்சாவடிக்கான வசதிகள் அரசுப் பள்ளிகளில் ஆய்வு
/
ஓட்டுச்சாவடிக்கான வசதிகள் அரசுப் பள்ளிகளில் ஆய்வு
ADDED : மார் 20, 2024 12:19 AM
மாமல்லபுரம்:தமிழகத்தில், லோக்சபா தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவு, ஏப்., 19ம் தேதி நடக்கிறது. அரசு உயர்நிலை, மேல்நிலை, ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தி, வாக்காளர்கள் ஓட்டு அளிப்பர்.
எனவே, ஓட்டுச்சாவடியாக செயல்படும் பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை, மின் இணைப்பு, சாய்வு நடைதளம் உள்ளிட்ட வசதிகள் அவசியம்.
இத்தகைய வசதிகள்உள்ளனவா, வசதிகள் இல்லாதது குறித்து, அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து பரிந்துரைக்குமாறு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அந்நிர்வாகத்தினர் பள்ளிதோறும் ஆய்வு செய்து வருகின்றனர். மாமல்லபுரம், கொக்கிலமேடு பகுதிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

