/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
செங்கையில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 05, 2025 10:13 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, எம்.பி., டி.ஆர். பாலு உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., டி.ஆர். பாலு தலைமையில், நேற்று, நடந்தது. காஞ்சிபுரம் எம்.பி., செல்வம், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், எஸ்.பி., சாய் பிரனித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து, ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தார். தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் குடிநீர் மேல் நிலை நீர்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம், மாமல்லபுரம் - கோட்டைக்காடு வரை நடைபெறும் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். மாமல்லபுரம் பகுதியில், மழைநீர் செல்லும் வகையில், பாலம் அமைக்க, 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பணிகள் விரைந்து துவக்கப்படும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்தார். மாவட்டத்தில், திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, அனைத்து துறை அதிகாரிகளுக்கு, எம்.பி., டி.ஆர்.பாலு உத்தரவிட்டார்.