/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி
/
மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டி
ADDED : பிப் 10, 2025 11:42 PM

திருப்போரூர், திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில், திருக்குறள் சார்ந்த அறிவுத்திறன் போட்டிகள், தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தன. பேரவை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 19 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 259 மாணவ- -மாணவியர் பங்கேற்றனர்.
திருக்குறள் சார்ந்த அறிவுத்திறன் போட்டியில், 4 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ- - மாணவியர், மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
பின், அவர்களுக்கு மாறுவேடம், ஒப்புவித்தல், கட்டுரை, ஓவியம், எழுதுதல், வினாடி - வினா, உள்ளிட்ட 18 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

