/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் வளாகங்களில் துாய்மை பணி தீவிரம்
/
கோவில் வளாகங்களில் துாய்மை பணி தீவிரம்
ADDED : அக் 23, 2024 01:24 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் இயங்கிவரும் தனியார் கடற்கரை விடுதி, அதன் ஊழியர்கள் வாயிலாக, துாய்மை பாரத விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியது.
இதையடுத்து, விடுதி ஊழியர்கள், இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் வளர்ந்த புதர், தேங்கிய குப்பை ஆகியவற்றை அகற்றி துாய்மைப்படுத்தினர். சுற்றுப்புற துாய்மையில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக, உறுதிமொழி ஏற்றனர்.
அதேபோல், திருவான்மியூர் திருவாசக வேந்தன் உழவாரப்பணி மன்றத்தினர், வேதகிரீஸ்வரர் கோவிலில் உழவாரப் பணிகள் மேற்கொண்டனர்.
இக்குழுவினர், சுவாமி விக்கிரகங்களில் படிந்திருந்த எண்ணெய் பிசுக்கு அழுக்கு நீக்கி, பூஜை பொருட்களில் படிந்த அசுத்தம் நீக்கினர். கோவில் வளாகத்தை துாய்மைப்படுத்தி, ரிஷபதீர்த்த குளத்து படிக்கட்டுகளை சீரமைத்தனர்.