/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் பணி தீவிரம்
/
புதிய குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் பணி தீவிரம்
புதிய குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் பணி தீவிரம்
புதிய குடிநீர் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் பணி தீவிரம்
ADDED : அக் 06, 2024 01:09 AM

அச்சிறுபாக்கம்,
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, பாபுராயன்பேட்டை ஊராட்சி. இங்கு, 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், ஆதிதிராவிடர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆண்டுகளுக்கு முன், பாபுராயன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரியின் உள்பகுதியில், குடிநீர் கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரேற்றி, குழாய் வாயிலாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றில், மழைக்காலங்களில் நீர் சுரப்பு ஏற்பட்டு, சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாபுராயன்பேட்டை -- எலப்பாக்கம் செல்லும் சாலையோரம், ஆதி திராவிடர் மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், 17.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக குடிநீர் கிணறு வெட்டப்பட்டது.
தற்போது, சாலையோரம் குடிநீர் கிணறு உள்ளதால், கிணற்றுக்கு தடுப்பு ஏற்படுத்தும் வகையில், கிணற்றில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.