ADDED : அக் 11, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், நடப்பாண்டு சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, பொன்னி நெல் சாகுபடியிலும் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், ஒரத்தி, கீழ்அத்திவாக்கம், எலப்பாக்கம், ராமபுரம், கிளியாநகர், மொறப்பாக்கம் மற்றும் எல்.எண்டத்துார் பகுதிகளில், கிணற்று பாசனம் வாயிலாக, நன்செய் மற்றும் புன்செய் நிலப்பரப்பில், விவசாயம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
தற்போது, ஏர் உழுதல், வரப்பு கட்டுதல், நடவு செய்வதற்கு நாற்றுப்பறிக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன.
தற்போது வரை, அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், பொன்னி நெல் நடவு செய்யும் பணி நடைபெற்று உள்ளது என, அச்சிறுபாக்கம் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.