/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்
/
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்
திருக்கழுக்குன்றம் வட்டாரத்தில் சம்பா பருவ நாற்று நடவு தீவிரம்
ADDED : நவ 08, 2024 09:20 PM

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் வட்டார பகுதி, நெல் சாகுபடியில் சிறந்து விளங்குகிறது. இப்பகுதி விவசாயிகள், சொர்ணவாரி, சம்பா ஆகிய பருவங்களாக, இரண்டு போகம் நெல் பயிரிடுகின்றனர். பாசனத்திற்கு பாலாறு, ஏரி, கிணறு பயன்படுகின்றன. வடகிழக்கு பருவ மழையையும் நம்பியுள்ளனர்.
பொங்கல் அறுவடை சம்பா பருவ சாகுபடியாக, தற்போது நெல் பயிரிடுகின்றனர். திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், நெரும்பூர், பொன்விளைந்தகளத்துார் சுற்றுப்புற பகுதிகளில், பாப்பட்லா, பொன்னி ஆகிய மூன்று மாத விளைச்சல் சன்ன ரக நாற்றுகள், தற்போது நடப்படுகின்றன.
கார்த்திகை மாதம், நான்கு மாத சன்ன ரகமான ஆர்.என்.ஆர்., நெல் பயிரிட திட்டமிட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.