/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச குழந்தைகள் உரிமை தினம்
/
சர்வதேச குழந்தைகள் உரிமை தினம்
ADDED : நவ 20, 2024 11:54 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று சர்வதேச குழந்தைகள் உரிமை தின விழா கொண்டாடப்பட்டது.
இதில், ஊராட்சி தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மதிச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவர் தேவன்பு பங்கேற்று, குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதன் அவதியத்தை விளக்கினார்.
மேலும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து சேர்த்தல், போதை பொருள் விற்பனையை தடை செய்தல், பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல் குறித்து, அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளி குழந்தைகளுக்கு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.