/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சர்வதேச அருங்காட்சியக தினம் மாமல்லையில் களைகட்டிய சுற்றுலா
/
சர்வதேச அருங்காட்சியக தினம் மாமல்லையில் களைகட்டிய சுற்றுலா
சர்வதேச அருங்காட்சியக தினம் மாமல்லையில் களைகட்டிய சுற்றுலா
சர்வதேச அருங்காட்சியக தினம் மாமல்லையில் களைகட்டிய சுற்றுலா
ADDED : மே 19, 2025 02:45 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன. இதை, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
நேற்று சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, நாடு முழுதிலும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் நினைவிடங்களை, பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிடலாம் என, மத்திய கலாசார அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதனால் நேற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
இதில் இலவசமாக அனுமதிக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், வெண்ணை உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் ஆகியவற்றுடன், எப்போதும் கட்டணமில்லாத அர்ஜுனன் தபசு, கடற்கரை உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணியர் கண்டு ரசித்தனர். குழுவாக நின்று, புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.