/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை
/
போதையில் பாட்டிலால் குத்தி ஓட்டுனர் தற்கொலை
ADDED : பிப் 13, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:தாம்பரம் அருகே படப்பை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ், 42. கார் ஓட்டுனர். இவரது மனைவி ரம்யா, 32. தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரம்யா கோபித்து கொண்டு, அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தாமஸ் வீட்டின் வெளியே, மது பாட்டிலை உடைத்து இடது கையில் குத்தி, ரத்தம் வெளியாகி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார், தாமஸின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

