/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேளாண் தொழில்நுட்ப கருவிகள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
வேளாண் தொழில்நுட்ப கருவிகள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
வேளாண் தொழில்நுட்ப கருவிகள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
வேளாண் தொழில்நுட்ப கருவிகள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : ஜூலை 15, 2025 12:18 AM
செங்கல்பட்டு, மாநில அளவில், நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்ப கருவிகளை கண்டறியும் போட்டியில் பங்கேற்க, வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, வேளாண்மை இணை இயக்குனர் பிரேம்சாந்தி அறிக்கை:
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மாநில அளவில் நவீன வேளாண் சாகுபடி தொழில்நுட்ப கருவிகளை கண்டறியும் மூன்று நபர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 1.5 லட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
இதில் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், கிராம, நகர்ப்புற இளைஞர்கள் பங்கேற்கலாம்.
நுழைவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்தி, 'உழவன் செயலி' வாயிலாக முன்பதிவு செய்து, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. போட்டியில் பங்கேற்போர், மாவட்ட அளவிலான தேர்வு குழுவிடம் தங்களது கருவிகளின் செயல் விளக்கங்களை புகைப்படம் அல்லது வீடியோவுடன் விளக்க வேண்டும்.
வரும் 15ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநரிடம் படிவத்தை பூர்த்தி செய்து, சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.