/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு
/
வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு
வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு
வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டம் அஞ்சலகத்தில் பதிவு செய்ய அழைப்பு
ADDED : மார் 02, 2024 12:09 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், வீடுகளுக்கு சோலார் பேனல் திட்டத்தில் பயன்பெற, அஞ்சலகம் வாயிலாக பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, செங்கல்பட்டு கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பளர் சண்முகச்சாமி அறிக்கை:
வீடுகளில் சோலார் பேனல் அமைத்து, பேட்டரிகளில் மின்சாரத்தை சேமித்து மக்களே பயன்படுத்த முடியும் என்ற நிலையில், அவர்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை, இலவச மின்சாரம் என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் இணைவோர், தங்களின் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதுடன்,உபரி மின்சாரத்தை விற்பனை செய்வதன் வாயிலாக, 15,000- - 18,000 ரூபாய் வரை லாபம் பெறலாம். இத்திட்டதில் இணைய விருப்பம் உள்ள பொதுமக்களின் விபரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள, தபால் துறையில் பணிபுரியும் அனைத்து தபால்காரர்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
எனவே, செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்டவர்கள் அனைவரும், இந்த அரிய வாய்ப்பை பெற, தபால்காரரையோ அல்லது அருகில் உள்ள அஞ்சலகத்தையோ தொடர்பு கொண்டு, தங்கள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

