/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
/
மாநில செஸ் சிறுவர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 14, 2024 06:27 AM
சென்னை : சென்னை அம்பத்துாரில் வரும் 20ல் நடக்க உள்ள மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் ஆதரவுடன், தருண் தேஜாஸ் செஸ் அகாடமி சார்பில், சிறுவர்களுக்கான மாநில அளவிலான செஸ் போட்டி, வரும் 20ம் தேதி அம்பத்துார், சேது பாஸ்கரா பள்ளியில் நடக்க உள்ளது.
இதில், 9, 11, 13, 17 வயது பிரிவில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. தவிர, ஓபன் பிரிவிலும் போட்டிகள் நடக்கின்றன.
வெற்றி பெற்ற நபர்களுக்கு மொத்த பரிசுத் தொகையாக, 35,000 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும், சிறப்பாக செயல்படும் 183 வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. பங்கேற்க விரும்புவோர் திருவள்ளூர் மாவட்ட சதுரங்க கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.