/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோடைக்கால விளையாட்டு பயிற்சிக்கு அழைப்பு
/
கோடைக்கால விளையாட்டு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஏப் 22, 2025 12:10 AM
செங்கல்பட்டு, மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி, வரும் 25ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக, மாவட்ட அளவிலான கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம், மேலக்கோட்டையூர் தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நடக்கிறது.
இதில் தடகளம், இறகுப்பந்து, கனோயிங் மற்றும் காயாக்கிங், குத்துச்சண்டை, வில்வித்தை போன்ற விளையாட்டுகள், வரும் 25ம் தேதி துவங்கி, மே மாதம் 15ம் தேதி வரை, 21 நாட்கள் நடைபெறுகின்றன.
இப்பயிற்சி முகாமில், 18 வயதிற்கு கீழ் உள்ள, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். ஆதார் கார்டு நகல் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முகாமில் பங்கேற்போர் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, நேரடியாகவும், dsochengalpattu@gmail.com, என்ற இ-மெயில் வாயிலாகவும், 74017 03461 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மாவட்டத்தில், விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனையர், இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.