/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'பைக்' விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி
/
'பைக்' விபத்தில் ஐ.டி., ஊழியர் பலி
ADDED : ஏப் 23, 2025 07:55 PM
திருப்போரூர்:திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ், 29. இவர், கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் பகுதி தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, சிறுசேரியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் வேலை முடிந்து, கேளம்பாக்கம் புதிய புறவழிச்சாலை வழியாக,'பஜாஜ் பல்சர் பைக்' கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, இளவந்தாங்கல் ரவுண்டானா தடுப்புச் சுவரில் தாமாக மோதி, தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தினேஷின் சடலத்தை கைப்பபற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

