/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்பனை செய்த ஐ.டி., ஊழியர்கள் கைது
/
கஞ்சா விற்பனை செய்த ஐ.டி., ஊழியர்கள் கைது
ADDED : மார் 11, 2024 11:34 PM
சென்னை,- ஓ.எம்.ஆர்., தரமணி, துரைப்பாக்கம், பெருங்குடி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள, கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., நிறுவன ஊழியர்களிடம், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தரமணி போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். இதில், தரமணியில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குமார்ஜின்னா, 29, தைப்பூர் ரஹ்மான், 25, ஆகியோர், வெளி மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று கஞ்சா கடத்தி வந்துள்ளனர்.
இதை, இங்குள்ள சில்லரை வியாபாரிகளிடம் கொடுத்து, சம்பாதித்து வந்ததும் தெரிந்தது. சில்லரை வியாபாரிகள், 20 கிராம் 1,000 ரூபாய் என விற்பனை செய்து வந்துள்ளனர்.
ஐ.டி., ஊழியர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இங்குள்ள, சில்லரை வியாபாரிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

