/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவழக்காரன்சத்திரம் ரேஷன் கடை கட்டடம் குளத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

ADDED : நவ 14, 2024 01:33 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பவழக்காரன்சத்திரம் பகுதியில், முன்பு ரேஷன் கடை இல்லை. இப்பகுதியினர் பூஞ்சேரியில் உள்ள ரேஷன் கடையில், பொருட்கள் வாங்கி வந்தனர்.
தங்கள் பகுதியில் ரேஷன் கடை துவக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், இப்பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு கட்டடத்தில், பகுதிநேர ரேஷன் கடை துவக்கப்பட்டது.
ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வலியுறுத்தப்பட்ட நிலையில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி, 9.13 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இதை குளத்தை துார்த்து கட்டியுள்ளதாகவும், குளத்தின் பெரும்பகுதியை, கிராவல் மண் நிரப்பி துார்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பகுதியினர் கூறியதாவது:
பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டியுள்ள குளத்தை, வார்டு கவுன்சிலர் தன்னிச்சையாக துார்த்துள்ளார். குளத்தில் வாரிய சேற்று மண்ணையே, குளத்து பகுதியில் நிரப்பி, ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டும் முன்பே, பேரூராட்சி, தாலுகா, கலெக்டர் அலுவலகங்களில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மண் இளகினால், கட்டடம் நிச்சயம் சரியும். குளத்தையும் துார்த்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து, உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.