ADDED : பிப் 13, 2025 08:37 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க கோரி, ஜாக்டோ - ஜியோ சார்பில், வரும் 25ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, செங்கல்பட்டு மாவட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மஹாலட்சுமி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், வரும் மார்ச் மாதம், சட்டப்பேரவை நிதி நிலை அறிக்கையில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஓய்வூதிய திட்டம் குறித்து அமைத்துள்ள மூன்று நபர் குழுவை, உடனடியாக களைக்க வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜாக்டோ - ஜியோ சார்பில், 14ம் தேதி, வட்டாட்சியர் அலுவலகங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டமும், 25ம் தேதி, மாவட்ட அளவில் மறியல் போராட்டமும் நடத்தப்படுகிறது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

