/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 14ல் ஜமாபந்தி துவக்கம்
/
செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 14ல் ஜமாபந்தி துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 14ல் ஜமாபந்தி துவக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மே 14ல் ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 03, 2025 01:56 AM
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட வருவாய் தீர்ப்பாய ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 14ம் தேதி துவங்குகிறது. தொடர்ந்து 30ம் தேதி வரை நடக்கிறது.
வருவாய்த் துறை, ஆண்டு பசலி வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சியை, அனைத்து தாலுகாக்களிலும், ஆண்டுதோறும் நடத்துகிறது. அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், வருவாய் கிராம பதிவு கணக்குகளை தணிக்கை செய்வர். பொதுமக்கள், வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவை கோரி மனுக்கள் அளிப்பர்.
இந்தாண்டு ஜமாபந்தி'வருவாய் தீர்வாயத்தை, வரும் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதற்காக கலெக்டர் அருண்ராஜ், தாலுகா தோறும் ஜமாபந்தி அலுவலர்களை நியமித்து, உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அந்தந்த தாலுகாவில் நடக்கும் ஜமாபந்தி நாட்களில் வருவாய் துறை அதிகாரிகளிடம் நேரில் மனு அளிக்கலாம்.
தாலுகா / ஜமாபந்தி அலுவலர் / நாட்கள்
திருப்போரூர் - கலெக்டர் - மே 14 முதல் 16, 20 முதல் 22
வண்டலுார் - மாவட்ட வருவாய் அலுவலர் - மே 14 முதல் 16
திருக்கழுக்குன்றம் - சப் - கலெக்டர், செங்கை - மே14 முதல் 16, 20 முதல் 23, 27
மதுராந்தகம் - ஆர்.டி.ஓ., மதுராந்தகம் - மே 14 முதல் 16, 20 முதல் 23, 27 முதல் 30
செய்யூர் - மாவட்ட வழங்கல் அலுவலர் - மே 14 முதல் 16, 20 முதல் 23, 27 முதல் 29
செங்கல்பட்டு - உதவி ஆணையர், கலால், செங்கை - மே 14, 16, 20
தாம்பரம் - ஆர்.டி.ஓ., தாம்பரம் - மே14 முதல் 16
பல்லாவரம் - கலெக்டர் கூடுதல் நேர்முக உதவியாளர், நிலம் - மே 14, 15