/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் வாலிபர் பலி
/
மின்சாரம் பாய்ந்து ஜார்க்கண்ட் வாலிபர் பலி
ADDED : அக் 27, 2025 11:31 PM
அம்பத்துார்: ஜார்க்கண்ட் மாநிலம், கிழக்கு ராமசந்த்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கவுசிக் புல்யா, 25. இவர், மனைவியுடன் அம்பத்துார், அத்திப்பட்டு, வானகரம் சாலை, பிருந்தாவன் நகரில் வசிக்கிறார்.
இவர் வசிக்கும் வீட்டில், இரண்டு நாட்களாக மின் வினியோகம் தடைபட்டதாக தெரிகிறது. இதனால், அருகில் உள்ள வீட்டின் மின் வினியோக பெட்டியில் மின் கம்பியைச் பொருத்தி, அதன் வாயிலாக தன் வீட்டிற்கு மின் இணைப்பை பெறும் முயற்சியில், கவுசிக் நேற்று முன்தினம் இரவு ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, கவுசிக் துாக்கி வீசப்பட்டு சுயநினைவை இழந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, கவுசிக்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

