/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெள்ளப்புத்துாரில் பனை விதை நடவு
/
வெள்ளப்புத்துாரில் பனை விதை நடவு
ADDED : அக் 27, 2025 11:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்: வெள்ளப்புத்துார் ஏரிக்கரையில் பனை விதை நடும் பணி நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில், வெள்ளப்புத்துார் ஏரிக்கரையில், அச்சிறுபாக்கம் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலமாக, ஆயிரம் பனை விதை நடும் பணி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயகுமார், அச்சிறுபாக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் சிவராணி முன்னிலையில், பனை விதைகள் நடப்பட்டன.
இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் பங்கேற்று பனை விதைகள் நடவு செய்தனர்.

