/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை சிற்ப கலைஞருக்கு 'கலைச்செம்மல்' விருது
/
மாமல்லை சிற்ப கலைஞருக்கு 'கலைச்செம்மல்' விருது
ADDED : மார் 07, 2025 01:23 AM

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிற்பக் கலைஞர், தமிழக அரசின் கலைச்செம்மல் விருது பெற்றார்.
மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 54.
இவர், மாமல்லபுரம் அரசு கட்டட, சிற்பக்கலை கல்லுாரியில் பயின்று, மரபு வழி சிற்பக்கலையில் பட்டம் பெற்றுள்ளார்.
இந்திய தொல்லியல் துறையில், முதுநிலை மாதிரியாளராக பணியாற்றுகிறார்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில், கர்நாடக மாநிலம் ஹம்பி கோவில் என, நாட்டின் 27 பாரம்பரிய நினைவுச் சின்னங்களில், சிதிலமடைந்த பகுதிகளை பழமை மாறாமல் புனரமைத்து உள்ளார்.
மரபு சிற்பக்கலையில் அவரது சேவையை பாராட்டி, தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை அவருக்கு 2024 - 25 ஆண்டின் 'கலைச்செம்மல்' விருது வழங்கி கவுரவித்துள்ளது.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின், இவ்விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, செப்பு பட்டய பாராட்டு சான்று ஆகியவற்றை வழங்கினார்.