/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூஞ்சேரி ஏரியில் மண் எடுக்க கலங்கல் கால்வாய் துார்ப்பு
/
பூஞ்சேரி ஏரியில் மண் எடுக்க கலங்கல் கால்வாய் துார்ப்பு
பூஞ்சேரி ஏரியில் மண் எடுக்க கலங்கல் கால்வாய் துார்ப்பு
பூஞ்சேரி ஏரியில் மண் எடுக்க கலங்கல் கால்வாய் துார்ப்பு
ADDED : அக் 30, 2024 01:51 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில், பொதுப்பணித்துறை ஏரி உள்ளது.
நெம்மேலி ஊராட்சி, பேரூரில் அமைக்கும் கடல்நீரில் குடிநீர் உற்பத்தி ஆலை பகுதியின் நிலமட்டத்தை உயர்த்துவதற்கு, கிராவல் மண் தேவைப்படுகிறது. இதனால், பூஞ்சேரி பொதுப்பணி துறை ஏரியில் மண் எடுக்கப்படுகிறது.
கனிம வளத்துறை, மாவட்ட கலெக்டர் வாயிலாக, கிராவல் மண் எடுக்க அனுமதித்துள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏரியில் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட, மூன்று மடங்கு ஆழத்திற்கு மண்ணை சுரண்டி, ஏரியை பாழாக்குவதாகவும், தனியார் தேவைக்கும் கிராவல் மண்ணை விற்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, ஏரியில் மண் எடுக்கவும், திரும்பி செல்லவும் லாரிகளுக்காக, வசந்தபுரி குடியிருப்பை ஒட்டியுள்ள ஏரிக்கரை பகுதி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்த நிறுவனத்தினர், ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் கலங்கல் கால்வாயை முற்றிலும் துார்த்தும், ஏரி உள்ளேயும் பாதை அமைத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றம் சாலையிலிருந்து, ஏரியில் நுழையவும், அங்கிருந்து சாலையில் நுழையவும், கனரக டாரஸ் லாரிகள் விபத்து அபாயத்துடன் கடக்கின்றன. மேலும், மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் மூடப்படாமல், சாலையில் புழுதி பறந்து, வாகன பயணியர் தடுமாறுகின்றனர்.
அதிக நடை மண் ஏற்றிச்செல்வதற்காக லாரிகள் வேகமாகவும் செல்கின்றன. அதிகாரிகளின் கண்காணிப்பு மேற்பார்வையில், மண் எடுக்க, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.