/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் நுழைவாயில் பகிங்ஹாம் கால்வாய் கழிவுநீர் சாக்கடையாக மாறிவரும் அவலம்
/
கல்பாக்கம் நுழைவாயில் பகிங்ஹாம் கால்வாய் கழிவுநீர் சாக்கடையாக மாறிவரும் அவலம்
கல்பாக்கம் நுழைவாயில் பகிங்ஹாம் கால்வாய் கழிவுநீர் சாக்கடையாக மாறிவரும் அவலம்
கல்பாக்கம் நுழைவாயில் பகிங்ஹாம் கால்வாய் கழிவுநீர் சாக்கடையாக மாறிவரும் அவலம்
ADDED : பிப் 17, 2025 01:17 AM

புதுப்பட்டினம்,:கல்பாக்கம் நுழைவாயிலில் உள்ள பகிங்ஹாம் கால்வாயில், புதுப்பட்டினம் பகுதியினர் குப்பையை குவித்து, கழிவுநீரை விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
அணுசக்தி துறை, கல்பாக்கம் நகரியம் - புதுப்பட்டினம் இடையே புதுப்பட்டினம் பகுதியில், கல்பாக்கம் நுழைவாயில் அருகில், பகிங்ஹாம் கால்வாய் கடக்கிறது.
அணுசக்தி துறை, நீண்ட காலத்திற்கு முன் கால்வாயில் பாலம் கட்டி, பயன்பாட்டில் உள்ளது. அணுசக்தி துறையினர், பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்காக, பாலத்தை கடந்தே புதுப்பட்டினம் செல்கின்றனர்.
புதுப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர், அணுசக்தி துறை ஒப்பந்த பணிகள், வங்கிகள், அரசு பேருந்து ஆகியவற்றுக்காக, கல்பாக்கம் செல்கின்றனர்.
இந்நிலையில், புதுப்பட்டினம் புதிய பாலம் மற்றும் பழைய பாலம் சாலைகள், பஜார் வீதி, விட்டிலாபுரம் சாலை ஆகிய பகுதிகளில், கால்வாய் கரையில் கடைகள் நடத்தும் வியாபாரிகள், கடை குப்பை, அழுகிய காய்கறிகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் ஆகியவற்றை பகிங்ஹாம் கால்வாயில் குவிக்கின்றனர்.
கால்வாய் கரையில் வசிக்கும் பொதுமக்கள், இந்த கால்வாயில் கழிவுநீர் விடுகின்றனர்.
குப்பையால் கால்வாய் துார்ந்து, கழிவுநீர் ஓடையாக மாறி, நோய் பரவும் அபாயத்துடன் உள்ளது. இதனால், பாலத்தில் கடந்து செல்வோர், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.
கால்வாயிலிருந்து, 100 மீ., தொலைவில் உள்ள கல்பாக்கம் பகுதி துாய்மையாக பராமரிக்கப்படும் நிலையில், அதன் நுழைவாயிலில், ஊராட்சிப் பகுதியில் உள்ள கால்வாய் சீர்கேடுடன் உள்ளது.
அடிப்படை வசதிகள் கோரி, அணுசக்தி நிர்வாகத்தை அடிக்கடி நாடும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், அத்துறை நுழைவாயில் கால்வாயில் குப்பை குவிப்பதை, கழிவுநீர் விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஊராட்சி நிர்வாகம், கால்வாய்க்கு பொறுப்பு வகிக்கும் பொதுப்பணி துறையுடன் ஆலோசித்து, கால்வாய் சீர்கேடிற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

