/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல்பாக்கம் மழை பதிவு அறிவிக்கப்படுமா?
/
கல்பாக்கம் மழை பதிவு அறிவிக்கப்படுமா?
ADDED : அக் 16, 2024 07:53 PM
கல்பாக்கம்:வடகிழக்கு பருவமழைக் காலத்தில், கல்பாக்கம் பகுதியில் பெய்யும் மழைப்பொழிவு அளவை, வருவாய்த்துறை வெளியிட வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில், காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் ஆகிய காரணங்களால், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், கனமழை பெய்கிறது.
தாலுகா தலைமையிடம் மற்றும் மாமல்லபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பெய்யும் மழையை, வருவாய்த் துறையினர் அளவிட்டு, மழைப்பொழிவு அளவை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தின் முக்கிய பகுதியான கல்பாக்கத்தில் பெய்யும் மழை அளவை தெரிவிப்பதில்லை. கோடை கால மழையின்போது, மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்தும், சில பகுதிகளில் மழை பெய்யாமலும் உள்ளது.
கல்பாக்கத்தில் மட்டுமே மழை, கனமழை பெய்யும் நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், கல்பாக்கம் பகுதி மழை அளவையும், வருவாய்த் துறையினர் வெளியிடுவர்.
தற்போது, கல்பாக்கம் மழை அளவு தெரிவிக்கப்படுவதில்லை. கல்பாக்கத்தின் மழை அளவு இல்லாமல், மாவட்டத்தின் சராசரி மழை அளவு, சரியான அளவாக அமையாது. எனவே, கல்பாக்கம் பகுதி மழை அளவையும் அறிவிக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.