/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவித்ர உற்சவத்தில் கல்யாண ரங்கநாதர்
/
பவித்ர உற்சவத்தில் கல்யாண ரங்கநாதர்
ADDED : நவ 14, 2024 01:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூரில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்து அறநிலையத்துறைத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம், ரங்கநாயகி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு உற்சவம் கடந்த 11 ம் தேதி துவங்கியது. உற்சவ நாட்களில், சிறப்பு அலங்காரம், பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் விழா நிறைவடைந்தது. இதில், சுற்றுவட்டார பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது.