/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'குடி'மகன்களின் கூடாரமாக மாறும் கானத்துார் புயல் பாதுகாப்பு மையம்
/
'குடி'மகன்களின் கூடாரமாக மாறும் கானத்துார் புயல் பாதுகாப்பு மையம்
'குடி'மகன்களின் கூடாரமாக மாறும் கானத்துார் புயல் பாதுகாப்பு மையம்
'குடி'மகன்களின் கூடாரமாக மாறும் கானத்துார் புயல் பாதுகாப்பு மையம்
ADDED : பிப் 14, 2024 10:58 PM

கூவத்துார்:கூவத்துார் அருகே கானத்துார் பகுதியில், 2015ம் ஆண்டு, பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டது.
மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில், சுற்றுவட்டார கிராமப்பகுதியில் கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்படுவர்.
சுற்றுச்சுவர் வசதி இல்லாததால், இரவு நேரத்தில் புயல் பாதுகாப்பு மையம், 'குடி' மகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.
துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.