/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் பிரசாத கடை ரூ.53.25 லட்சத்திற்கு ஏலம்
/
கந்தசுவாமி கோவில் பிரசாத கடை ரூ.53.25 லட்சத்திற்கு ஏலம்
கந்தசுவாமி கோவில் பிரசாத கடை ரூ.53.25 லட்சத்திற்கு ஏலம்
கந்தசுவாமி கோவில் பிரசாத கடை ரூ.53.25 லட்சத்திற்கு ஏலம்
ADDED : மே 29, 2025 09:53 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரசாத கடை உள்ளிட்ட உரிமங்களுக்கான பொது ஏலம், கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
வரும் ஜூலை 1ம் தேதி முதல், 2026 ஜூன், 30ம் தேதி வரை, ஓராண்டு காலத்திற்கு இந்த உரிம ஏலம் செல்லுபடியாகும்.
இந்த ஏலம், செங்கல்பட்டு உதவி ஆணையர் ராஜலட்சுமி, ஆய்வாளர் பாஸ்கரன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோரின் முன்னிலையில் நடத்தப்பட்டது.
இதில் பிரசாத கடை உரிமம், 53.25 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. தற்காலிக கடை வரி வசூல் உரிமம், 1.66 லட்சம் ரூபாய்க்கும், வாகன பாதுகாப்பு கட்டணங்கள் பெறும் உரிமம், 4.61 லட்சம் ரூபாய்க்கும் எடுக்கப்பட்டது.
ஆடு, கோழி சேகரிக்கும் உரிமம் ஏலம், 1.33 லட்சம் ரூபாய்க்கும், வெள்ளி உரு விற்பனை உரிமம் ஏலம், 95,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டது.
இதில், காணிக்கை முடி சேகரிக்கும் உரிமம், நெய் தீபம் விற்பதற்கான உரிமம், சிதறு தேங்காய், உப்பு, மிளகு ஆகியவை சேகரிப்புக்கான உரிம ஏலம் ஆகியவற்றை யாரும் கேட்கவில்லை.
இதனால், மறு தேதிக்கு ஏலம் தள்ளி வைக்கப்பட்டது.