/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடி நிதியில் பணிகள் தீவிரம்
/
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடி நிதியில் பணிகள் தீவிரம்
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடி நிதியில் பணிகள் தீவிரம்
மறைமலை நகர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.300 கோடி நிதியில் பணிகள் தீவிரம்
ADDED : மார் 05, 2024 04:01 AM
செங்கல்பட்டு, : மறைமலை நகர், 2010ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியின் மொத்த பரப்பு, 58.08 கி.மீ. மொத்த மக்கள்தொகை 97,538.
மறைமலை நகரின் 21 வார்டுகளில் 2,142 சாலைகள் உள்ளன. அவற்றின் நீளம் 325.708 கி.மீ.,
இதில், ஆறு வார்டுகளில், 2007- - 08ம் ஆண்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடை அபிவிருத்தி திட்டத்தில், 37.50 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
பாதாள சாக்கடை திட்டத்தில், 68 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அடிகளார் சாலையில், 2.20 எம்.எல்.டி., கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
மீதமுள்ள 15 வார்டுகளில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் விடப்பட்டன.
இதனால், மீதமுள்ள பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுத்தது. செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, சட்டசபையில் இது குறித்து வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ள 15 வார்டுகளுக்கு, புதிதாக பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பின், மத்திய - மாநில மற்றும் நகராட்சி பங்களிப்புடன், 300.51 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு, கடந்தாண்டு ஜூலை 7ம் தேதி, முதன்மை ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டது.
தொடர்ந்து, விடுபட்ட 15 வார்டுகளில், 218.65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த பிப்., 14ம் தேதி, டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி நடக்கின்றன.
இதற்காக, இரண்டு இடங்களில், 4.49 எம்.எல்.டி., மற்றும் 11.43 எம்.எல்.டி., கொள்ளளவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க, 37.39 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது.
இப்பணிக்கு, வரும் ஏப்., 17ம் தேதி, டெண்டர் விடப்பட உள்ளது என, நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
நகராட்சியில், 15 வார்டுகளில், புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த, 'டெண்டர்' விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் நடக்கின்றன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 'டெண்டர்' விடும் பணிகளும் நடக்கின்றன.
டி.சவுந்தர்ராஜன்,
கமிஷனர், மறைமலை நகர் நகராட்சி.

