/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரியச்சேரி அரசு பள்ளிக்கு விருது
/
கரியச்சேரி அரசு பள்ளிக்கு விருது
ADDED : டிச 26, 2025 05:35 AM
மாமல்லபுரம்: கரியச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாநில விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை, மாநில அளவில் சிறந்த பள்ளிகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து, விருது வழங்கி கவுரவிக்கிறது.
கடந்த 2024 - 25ம் கல்வியாண்டின் சிறந்த பள்ளிகளில், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் ஒன்றான, கல்பாக்கம் அடுத்த, கரியச்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விருது பெற்றுள்ளது.
இதுகுறித்து, பள்ளி தலைமையாசிரியை ெஹப்சிபா பூமணி கூறியதாவது:
எங்கள் பள்ளியில், மாணவ - மாணவி யர், 131 பேர் படிக்கின்றனர்.
தற்போது மாணவர் எண்ணிக்கை அதிகரித்தது, அனைத்து வகுப்புகளில் மேஜை, இருக்கை வசதி, சுத்திகரிப்பு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பது, மேலாண்மை குழு செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

