/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுகோள்
/
மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுகோள்
ADDED : டிச 26, 2025 05:36 AM
மறைமலை நகர், டிச. 26- பொத்தேரி ஜி.எஸ்.டி., சாலையில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைமலை நகர் நகராட்சி,பொத்தேரி பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள் உள்ளிட்டவை உள்ளன. இவற்றிக்கு பொத்தேரி துணை மின் நிலையத்தில் இருந்து சாலை ஓரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பொத்தேரி கோழிப்பண்ணை அருகில் ஜி.எஸ்.டி., சாலையின் அணுகு சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. எனவே இந்த மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

