/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் கர்நாடக பயணி உயிரிழப்பு
/
மாமல்லையில் கர்நாடக பயணி உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், : கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஆண்டனி ஜெரிக், 35. அதே பகுதி தனியார் நிறுவன ஊழியர். நிறுவனம் சார்பில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தனியார் கடற்கரை விடுதியில், ஜன., 26ம் தேதி கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
அதில் பங்கேற்ற ஆண்டனி ஜெரிக், நேற்று முனதினம் காலை, நெஞ்சில் எரிச்சலாக உள்ளதாகக் கூறி, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
மாமல்லபுரம் போலீசார், உடலைக் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, அவரின் சகோதரர் ராபர்ட், மாமல்லபுரம் போலீசில் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.