sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழைய பஞ்சாங்கத்தில் இயங்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்

/

பழைய பஞ்சாங்கத்தில் இயங்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்

பழைய பஞ்சாங்கத்தில் இயங்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்

பழைய பஞ்சாங்கத்தில் இயங்கும் காட்டாங்கொளத்துார் ஒன்றியம்


ADDED : மார் 31, 2025 02:03 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டாங்கொளத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 193.90 சதுர கி.மீ., பரப்பில், கடந்த 1961ம் ஆண்டு, ஏப்.,13ல் புதிதாக உருவாக்கப்பட்டது.

தற்போது, இந்த ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், 2 லட்சத்து 8,897 நபர்கள் இந்த ஒன்றியத்தில் வசிப்பதாக தரவுகள் கூறுகின்றன.

இந்த தரவில், 55,630 நபர்கள் ஆதிதிராவிடர் கள், 4,422 நபர்கள் பழங்குடியினர், 1 லட்சத்து 48,845 நபர்கள் இதர சமூகத்தினர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின், 2021ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. நகரமயமாக்கலின் விளைவால், தற்போது காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், ஒன்றிய நிர்வாகம் சார்பில், பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுவதால், அடிப்படை வசதிகள் ஐந்தில் ஒரு பங்கே நிறைவேற்றப்படுவதாக, ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் கூறியதாவது:

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சென்னை மாநகரின் புறநகர் பகுதியாக உள்ளது. பேருந்து வசதி, புறநகர் மின்சார ரயில் சேவை, தனியார் பள்ளி, கல்லுாரி, பல்கலைகள் வரவு, ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்கம் என, சென்னை மாநகரின் நகரமயமாக்கலுடன் பிணைக்கப்பட்டு, மாநகரின் தடங்களையும் சுமந்து நிற்கிறது.

கிராமங்களை உள்ளடக்கிய, வேளாண் தொழிலை மட்டுமே முக்கிய வாழ்வாதாரமாக கொண்டுள்ள இந்த ஒன்றியம், நகரமயமாக்கலால் ஈர்க்கப்பட்டு, கடந்த 25 ஆண்டுகளில் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

தற்போதும், தொடர் வளர்ச்சியில் உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் பேர் புதிதாக வீடு கட்டி, இங்கு குடியேறி வருகின்றனர். ஆனால், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இங்கு அடிப்படை வளர்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

இப்போது 12 லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்தாலும், கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படியே மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்கள் செயல்படுகின்றன.

இதனால் சாலை, குடிநீர், கால்வாய் பணிகளுக்கு 2011ல் கணக்கிடப்பட்ட மக்கள் தொகைக்கு ஏற்பவே நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால், 39 ஊராட்சிகளும் அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற முடியாமல் தள்ளாடுகின்றன.

தவிர அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள், நுாலகங்கள் உள்ளிட்ட வசதிகள், 2011 மக்கள் தொகை கணக்கின்படியே உள்ளன.

ஒன்றிய நிர்வாகத்திலும், 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட தரவுகளே உள்ளதால் மத்திய, மாநில அரசுகள், 2011 மக்கள் தொகை கணக்கின்படியே நிதி ஒதுக்கின்றன. இதனால், காட்டாங்கொளத்துார் ஒன்றியம் அனைத்துவித வளர்ச்சிப் பணிகளிலும் அரைகுறையாக இருந்து அல்லாடுகிறது.

எனவே, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகம் இணைந்து, ஊராட்சிதோறும் தற்போதைய மக்கள் தொகையை கணக்கிட வேண்டும். அதற்கேற்ப மத்திய, மாநில அரசுகளிடம் நிதியைப் பெற்று, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் தேவைக்கேற்ப வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us