/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நுாற்றாண்டு விழா கொண்டாடிய காயரம்பேடு துவக்கப்பள்ளி
/
நுாற்றாண்டு விழா கொண்டாடிய காயரம்பேடு துவக்கப்பள்ளி
நுாற்றாண்டு விழா கொண்டாடிய காயரம்பேடு துவக்கப்பள்ளி
நுாற்றாண்டு விழா கொண்டாடிய காயரம்பேடு துவக்கப்பள்ளி
ADDED : ஏப் 04, 2025 09:46 PM
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்துள்ள காயரம்பேடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் நுாற்றாண்டு விழா, நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு கிராமத்தில், கடந்த 1921ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி துவக்கப்பட்டு, தற்போது வரை இயங்கி வருகிறது.
பள்ளியின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியுடன், பள்ளி வளாகத்தில் நேற்று விமரிசையாக நடந்தது.
இதில், பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில், நினைவு பரிசுடன் சீர்வரிசை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், காட்டாங்கொளத்துார் ஒன்றிய சேர்மன் உதயா கருணாகரன், ஊராட்சி தலைவர் ஜெயகாந்தி, துணைத் தலைவர் திருவாக்கு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
* பாலுார் பள்ளி ஆண்டு விழா
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், பாலுார் - சிங்கபெருமாள்கோவில் சாலை ஓரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியின் 130வது ஆண்டு விழா, நேற்று காலை நடைபெற்றது. பாலுார் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ -- மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

