/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொக்கிலமேடு - வடகடம்பாடி தனியார் மினி பஸ் இயக்கம்
/
கொக்கிலமேடு - வடகடம்பாடி தனியார் மினி பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 09, 2025 08:59 PM
மாமல்லபுரம்:கொக்கிலமேடு - வடகடம்பாடி இடையே, சிற்றுந்து போக்குவரத்து துவக்கப்பட்டு உள்ளது.
அரசு பேருந்து வசதியற்ற பகுதிகளில், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
பிரதான போக்குவரத்து சாலை வரை சென்று காத்திருந்து, அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் நெரிசலிலும், அதிக கட்டணத்திலும் கடும் அவதியுடன் பயணம் செய்கின்றனர்.
இதை தவிர்க்க, பேருந்து வசதியற்ற பகுதிகள் போக்குவரத்து கருதி, புதிய வழித்தடங்களில் தனியார் சிற்றுந்துகள் இயக்க, அரசு உத்தரவிட்டது. அதன்படி, மாமல்லபுரம் அடுத்துள்ள எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு - வடகடம்பாடி இடையே, தனியார் சிற்றுந்து போக்குவரத்து, நேற்று துவக்கப்பட்டது.
கொக்கிலமேடில் முதல் நடையாக, காலை 6:40 மணிக்கு புறப்பட்டு, வெண்புருஷம், ஐந்து ரதம், மாமல்லபுரம் பேருந்து நிலையம், பூஞ்சேரி, பெருமாளேரி வழியாக, வடகடம்பாடியை அடையும்.
அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் கொக்கிலமேடை அடையும். குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாய், அதிகபட்சம் 20 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது.