/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிருஷ்ண ஜெயந்தி விழா திருப்போரூரில் கோலாகலம்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா திருப்போரூரில் கோலாகலம்
ADDED : ஆக 18, 2025 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் எம்.ஜி.ஆர்., தெரு கிரிவல சாலையில், கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு, நேற்று முன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது.விழாவை ஒட்டி கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இரவு 8:00 மணியளவில், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுகளில் வழிபாடு செய்ததுடன், இக்கோவிலுக்கும் வந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.