/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காளத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
காளத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 10, 2025 11:59 PM

காட்டாங்கொளத்துார்,மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் பழமையான ஸ்ரீ ஞானாம்பிகை சமேதஸ்ரீ காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ராகு கேது பரிகார தலமான இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில் கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் உபயதாரர் நிதியின் வாயிலாக நடைபெற்றன.
பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். மூன்று நாட்களாக கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், விமான ஸ்துாபி ஸ்தானம் ,சயானதி வாசம் உள்ளிட்டவை நடைபெற்றது.
நேற்று காலை யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார விமானங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
பூமிபூஜை
நல்லுாரில், ஆதிதிருமூலர் கோவில் கட்டுமானப் பணிகள், பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது.
திருமூலர் திருமந்திரம் இயற்றியுள்ளார். நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம், தியானம் உள்ளிட்ட அஷ்டாங்க யோகங்கள் குறித்து அருளியுள்ளார்.
இதுகுறித்து, திருமூலர் சத்யா என்பவர், தியானபூமி பவுண்டேஷன் சார்பில், மாமல்லபுரம் அடுத்த, நல்லுாரில், ஆதிதிருமூலர் சித்தர் பீடம் நிறுவியுள்ளார்.
திருமூலர், திருமந்திரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆய்விற்காகவும், இங்கு ஆதிதிருமூலர் கோவில் அமைக்கப்படவுள்ளது. இக்கோவில் கட்டுமானப் பணிகளை, நேற்று, திருமூலர் சத்யா திருமந்திரங்கள் முழங்கி, பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தார்.

