/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை
/
ஆதிபராசக்தி அம்மனுக்கு கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : செப் 12, 2025 02:12 AM

மேல்மருவத்துார்:ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஜி.பி.நகரில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்லுாரி வளாகத்தில் குரு பீடம், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளன.
இங்கு கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி குருபூஜையுடன் துவங்கியது.
சக்தி கொடி ஏற்றி, முதல் கால பூஜையுடன், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நேற்று, குருபீட கோபுர கலசத்திற்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் செந்தில்குமாரும், ஆதிபராசக்தி அம்மன் கோவில் கோபுரத்திற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் அன்பழகனும் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
அதன் பின், குருபீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் சித்தர் திருவுருவ சிலைக்கும், ஆதிபராசக்தி அம்மனுக்கும் லட்சுமி பங்காரு அடிகளார் சிறப்பு அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டினார். விழாவில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர்.