/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குருபீடத்திற்கு கும்பாபிஷேகம்
/
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குருபீடத்திற்கு கும்பாபிஷேகம்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குருபீடத்திற்கு கும்பாபிஷேகம்
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் குருபீடத்திற்கு கும்பாபிஷேகம்
ADDED : அக் 20, 2024 12:26 AM

மேல்மருவத்துார்:செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த 16ம் தேதி, துவங்கியது.
அதன்பின், குரு பீடத்தில் பங்காரு அடிகளார் திருவுருவச்சிலை, கடந்த 17ம் தேதி பிரதிஷ்டை செய்தனர். சித்தர் பீட வளாகத்தில், யாக குண்டங்கள் அமைத்து, கலசவிளக்கு வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. குருபீத்திடத்திற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்பின், பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன், தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், கலெக்டர் அருண்ராஜ், தென்மாநில ரயில்வே அதிகாரி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.