/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் போட் ஹவுஸில் குதுாகலம்
/
முதலியார்குப்பம் போட் ஹவுஸில் குதுாகலம்
ADDED : அக் 05, 2025 02:01 AM

செய்யூர்:முதலியார்குப்பம் போட்-ஹவுஸிற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணியர் வருகை தந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப்பகுதியில் 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' உள்ளது. இது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படுகிறது.
பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து தங்களின் விருப்பத்திற்கேற்ப படகுகளில் சவாரி செய்து, தனி தீவு போல காட்சி அளிக்கும் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து பொழுது போக்குகின்றனர்.
பெரும்பாலும் குடும்பத்தினருடன் வருவோர் 8 இருக்கைகள் கொண்ட விசைப்படகு, 6 இருக்கைகள் கொண்ட விசைப்படகில் செல்ல விருப்பம் காட்டுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் வாலிபர்கள் மூன்று இருக்கைகள் கொண்ட நீர் விளையாட்டு வகையை சேர்ந்த அதிவேக விசைப்படகுகில் சவாரி செய்து வருகின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு காலண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி நேற்று 700க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன், போட்-ஹவுஸிற்கு வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.