/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை மறைமலைநகரில் குற்றம் அதிகரிப்பு
/
கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை மறைமலைநகரில் குற்றம் அதிகரிப்பு
கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை மறைமலைநகரில் குற்றம் அதிகரிப்பு
கண்காணிப்பு கேமரா பற்றாக்குறை மறைமலைநகரில் குற்றம் அதிகரிப்பு
ADDED : டிச 19, 2024 11:52 PM
மறைமலைநகர், மறைமலைநகர் காவல் நிலைய எல்லையில் மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட முக்கிய புறநகர் பகுதிகள் மற்றும் கிராமங்கள் உள்ளன.
மேலும், மறைமலைநகர் சிப்காட் பகுதியிலுள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், புறநகர் பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் வாடகைக்கு தங்கி, பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் போலீசாரின்,'மூன்றாவது கண்' என அழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் இல்லை.
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க, கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக உள்ளன.
ஆனால், மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெல்ரோசாபுரம், கூடலுார், பேரமனுார், சிங்கபெருமாள்கோவில், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், போதிய அளவில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. பல இடங்களில், பழுதடைந்து உள்ளன.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
மறைமலைநகர் சிப்காட் பகுதியில் இரவு பணி முடிந்து செல்வோரை குறி வைத்து மொபைல்போன் பறிப்பு, தனியாக வசித்து வருவோரின் வீடு புகுந்து கொள்ளை, இருசக்கர வாகனங்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
நகரின் பஜார் வீதிகளில் மட்டும் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு உள்ளன.
வளர்ந்து வரும் பகுதிகள், தெருக்கள் மற்றும் சிப்காட் பகுதியில் கேமராக்கள் இல்லை.
தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் அதிக வருமானம் வரும் நகராட்சிகளில், மறைமலைநகர் நகராட்சி ஒன்று.
ஆனால் இங்கு, போதிய அளவில் பாதுகாப்பு வசதிகள் இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் காவல் துறையினரிடம் கலந்து ஆலோசனை நடத்தி, முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.