/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் அரசு கல்லுாரிக்கு நிலம் ஒதுக்கீடு
/
செய்யூர் அரசு கல்லுாரிக்கு நிலம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 27, 2025 03:24 AM
செங்கல்பட்டு:செய்யூரில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கட்டுவற்கு, வருவாய்த்துறை நிலம் வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட தலைநகர், செங்கல்பட்டில், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லுாரி, 1975ம் ஆண்டு துவக்கப்பட்டு, இயங்கி வருகிறது.
இந்த கல்லுாரியில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகா பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இக்கல்லுாரியில், செய்யூர் தாலுகாவில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர். இங்கு இடம் கிடைக்காதோர் வேறு வழியின்றி மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதியில் உள்ள தனியார் கல்லுாரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.
இதனால், செய்யூரில் அரசு கல்லுாரி துவக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, தமிழக சட்டசபையில், பட்ஜெட் அறிவிப்பில், 'செய்யூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்படும்' என, கடந்த மார்ச் 5ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, செய்யூரில் அரசு கலைக்கல்லுாரி புதிய கட்டடம் கட்ட, அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் 16 சென்ட் நிலத்தை, உயர் கல்வித் துறைக்கு, வருவாய்த் துறையினர் வழங்கி உள்ளனர்.

