/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் தரைப்பாலம் உடைந்து காஞ்சி நெடுஞ்சாலையில் பள்ளம்
/
செங்கையில் தரைப்பாலம் உடைந்து காஞ்சி நெடுஞ்சாலையில் பள்ளம்
செங்கையில் தரைப்பாலம் உடைந்து காஞ்சி நெடுஞ்சாலையில் பள்ளம்
செங்கையில் தரைப்பாலம் உடைந்து காஞ்சி நெடுஞ்சாலையில் பள்ளம்
ADDED : அக் 19, 2024 01:32 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி, தனியார் பள்ளிகள், சார் - பதிவாளர் அலுவலகம், சர்ச், மாவட்ட சிறைச்சாலை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
இந்த சாலை அதிக அளவில் போக்குவரத்து நிறைந்தது. இந்த சாலையின் குறுக்கே, மாவட்ட சிறைச்சாலை அருகில், கொளவாய் ஏரிக்கு மழைநீர் செல்லும் தரைப்பாலம் உள்ளது.
இந்த தரைப் பாலத்தில், நேற்று காலை திடீரென உடைந்து, மூன்று அடி அகலத்தில், சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிமென்ட் கான்கிரீட் கலவை வாயிலாக, பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.