/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில சேகரிப்பு தொகுப்பு திட்டம் பதுவஞ்சேரி விவசாயிகள் எதிர்ப்பு
/
நில சேகரிப்பு தொகுப்பு திட்டம் பதுவஞ்சேரி விவசாயிகள் எதிர்ப்பு
நில சேகரிப்பு தொகுப்பு திட்டம் பதுவஞ்சேரி விவசாயிகள் எதிர்ப்பு
நில சேகரிப்பு தொகுப்பு திட்டம் பதுவஞ்சேரி விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : அக் 26, 2024 03:39 AM
தாம்பரம்:மாடம்பாக்கம், நுாத்தஞ்சேரி, பதுவஞ்சேரி, கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய பகுதிகளில், நில சேகரிப்பு பகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ், 620 ஏக்கர் நிலத்தை, மேம்படுத்த, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
இதற்காக, நில உரிமையாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம், செப்., 20ம் தேதி அகரம்தென் பகுதியில் நடந்தது.
சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், 'விவசாய நிலத்தை, விவசாயத்திற்காகவே பயன்படுத்துகிறோம். எங்களுக்கு இத்திட்டம் தேவையில்லை' என, அனைத்து விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான கலந்தாய்வு கூட்டம், பதுவஞ்சேரியில் நேற்று மாலை நடந்தது.
இதில், மாடம்பாக்கம், பதுவஞ்சேரி, கோவிலாஞ்சேரி, அகரம்தென், நுாத்தஞ்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'காலம் காலமாக விவசாயம் செய்து வருகிறோம். அப்படியிருக்கையில், 620 ஏக்கர் விவசாய நிலத்தை, சி.எம்.டி.ஏ., மேம்படுத்தி தருவதாக கூறுகிறது. அத்திட்டம் எங்களுக்கு வேண்டாம். விவசாயிகள் மீது குண்டு போட்டு அழித்துவிட்டு, நிலங்களை மொத்தமாக எடுத்துக்கொள்ளுங்கள்' என, காட்டமாக பேசினர்.