/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப், மொபைல் திருட்டு
/
அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப், மொபைல் திருட்டு
அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப், மொபைல் திருட்டு
அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப், மொபைல் திருட்டு
ADDED : நவ 09, 2025 09:45 PM
வண்டலுார்: வண்டலுாரில், அலுவலகத்திற்குள் புகுந்து லேப்டாப், மொபைல் போன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலுார், சிங்காரத்தோட்டம், பிரதான சாலையை சேர்ந்தவர் சந்திரசேகர், 65. அதே பகுதியில், மாடியில், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, 'ரியல் எஸ்டேட்' தொழிலுக்கான அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, அலுவலகத்தின் கதவை திறந்து வைத்தபடி, அயர்ந்து துாங்கியுள்ளார்.
இரவு 11:30 மணிக்கு, விழித்த சந்திரசேகர், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு லேப்டாப், இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 40,000 ரூபாய் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.