/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சட்ட கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
/
சட்ட கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 07, 2026 06:19 AM
சென்னை: சென்னை, தரமணி அம்பேத்கர் சட்ட பல்கலை கல்லுாரியில், இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் ஆரிப், கரிகாலன் வளவன், வீரவேல், கோகுல் ஆகிய நான்கு மாணவர்களை, பல்கலை நிர்வாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம், சஸ்பெண்ட் செய்துள்ளது.
இவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும், மாணவர்களிடம் பாரபட்சமாக செயல்படும் பல்கலை நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பல்கலை நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தரமணி போலீசார் மற்றும் பல்கலை நிர்வாகம் அவர்களிடம் பேசினர்.
நாளை, பல்கலை நிர்வாகம் மற்றும் மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

