/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண்ணிடம் சீண்டல் வழக்கறிஞர் கைது
/
பெண்ணிடம் சீண்டல் வழக்கறிஞர் கைது
ADDED : ஆக 04, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாஸ்திரி நகர்,பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞரை, போலீசார் கைது செய்தனர்.
பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், நேற்று முன் தினம் இரவு, 22 வயது பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். எதிரே மதுபோதையில் வந்த சிலரில், ஒரு நபர் பெண்ணிடம் பாலியல் ரீதியில் சீண்டியதாக கூறப்படுகிறது.
அப்பெண், சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கிரிதரன், 25, என தெரிந்தது. நேற்று அவரை, போலீசார் கைது செய்தனர்.