/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'
/
மனைவியை கொன்ற கணவருக்கு 'ஆயுள்'
ADDED : ஜன 01, 2026 04:47 AM
செங்கல்பட்டு:மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கஸ்துாரி, 54. மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 2021ம் ஆண்டு டிச., 24ம் தேதி, ஆறுமுகம் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து, கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில்
நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிகலா ஆஜரானார். வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.

